புராணங்களில் வரும் நிகழ்வுகள் கதைகளாகக் கூறப்படும் போது அந்தக் கதைகளில் வரும் தத்துவங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது கதைகளைச் சொல்பவர்கள் கைகளிலும் இருக்கிறது; நம்முடைய புராணக் கதைகளும் நிர்வாக மற்றும் மேலாண்மைத் தத்துவங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுத்துக் கூறுபவை தான். நிர்வாகவியலில் வளங்களும் (Resources) அவற்றை முறையாக நிர்வகிக்க நிர்வாகிகளும் (Manager) இன்றியமையாத விஷயங்கள். ஒரு நிறுவனம் வெற்றி பெற இரண்டுமே சிறப்பாக இருத்தல் அவசியம். போர்க்களத்தைப் பொறுத்தவரை படைபலம் தான் வளம்; படையை நடத்திச் செல்லும் தளபதிதான் நிர்வாகி.
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் யுத்தம் மூள்கிறது. இரு தரப்பிற்கும் பொதுவாக இருக்கும் கிருஷ்ணனிடம் உதவி கேட்கச் செல்கிறார்கள். பாண்டவர் தரப்பின் அர்ஜுனனும் கௌரவர் தரப்பின் துரியோதனனும். (கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருக்க, துரியோதனன் தலைப் பக்கமும் அர்ஜுனன் கால் பக்கமும் அமர்ந்த கதை வேறு - அது நமக்குத் தெரிந்ததே!)
கிருஷ்ணன் அவர்கள் இருவரிடமும் பேசிய Deal தான் இங்கே முக்கியம். "ஒரு புறம் எனது படைபலம் - உலகின் மிகச் சிறந்த படைகளுள் ஒன்று. பல்லாயிரம் பயிற்சி பெற்ற வீரர்கள், குதிரை, யானை, ரதங்கள், அவர்களுக்கான சிறப்பாகப் பராமரிக்கப் பட்ட ஆயுதங்கள், இத்யாதிகள்; மறுபுறம் நிராயுதபாணியாக நான் மட்டுமே. இப்போது நீங்கள் இருவரும் உங்களுக்கு எது வேண்டுமென்று தேர்வு செய்யுங்கள்." என்று கூறுகிறார்.

"What do you want? A very good resource - or an eminent, excellent, extraordinary manager? Choose between the two." துரியோதனன் படைபலத்தை, அதாவது வளங்களைத் (Resources) தேர்வு செய்கிறான்; அர்ஜுனன் தேர்வு செய்வது ஸ்ரீ கிருஷ்ணனை - சிறந்ததொரு நிர்வாகியை (Manager).
இறுதியில் போரில் ஜெயித்தவர்கள் யார் என்பதும் அது ஸ்ரீ கிருஷ்ணரால் மட்டுமே சாத்தியப்பட்டது என்பதும் மகாபாரதம் அறிந்த அனைவருக்குமே தெரியும். இதில் மெய்ஞ்ஞானம் கூறுவது "புற உலகத்தில் எது இருந்தாலும் அதை இயக்குபவன் இறைவன்; அந்த மெய்ஞ்ஞானம் கிடைத்து விட்டால் வெற்றி பெரும் மார்க்கமும் உனக்குப் புலப்படும். வெற்றியும் பெறுவாய்" என்பதே.
நிர்வாகவியல் தத்துவம் "வளங்கள் வளங்கள் தான்; சிறப்பான நிர்வாகியே வெற்றிக்கு வழி வகுப்பவன். (Resources are resources; It is with the good manager to utilize and succeed.)"
#மனித வளம் #மேலாண்மை #மேலாளர் #கிருஷ்ணர் #அர்ஜுனன்