தங்கம்... அநேகப் பெண்களால் விரும்பப் படும் உலோகம். இப்போது அதன் விலைமதிப்பைப் பொறுத்து, பெரும்பாலானவர்களாலும் விரும்பப் படும் உலோகமாக உள்ளது. விரும்பப் படுவதொடு மட்டுமல்லாமல், இன்றைய வாழ்வியலில் பல குடும்பங்களை, குடும்பங்களின் பொருளாதார பலத்தினை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாகவே உள்ளது. இவையனைத்தையும் தாண்டி, ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் ஆளும் சக்தி இந்தத் தங்கம் தான். அதாவது ஒரு நாடு, தன்னிடம் இருப்பு வைத்திருக்கும் தங்கத்தின் அளவுக்கு மட்டுமே பணத்தை அச்சிட முடியும். ஆக, ஒரு அரசாங்கத்திடம் இருக்கும் தங்கத்தின் அளவு தான் அந்த நாட்டின் பொருளாதார நிலையை நிர்ணயிக்கிறது.
தங்கம் |
பழங்காலத்தில் இருந்தே தங்கத்தில் ஆபரணங்கள், பொருட்கள் செய்து உபயோகிப்பதை இந்தியர்கள் மட்டுமல்லாது பல நாடுகளிலும் பின்பற்றி உள்ளனர். தங்கத்தைப் பெரிதாக மதிப்பதற்குக் காரணம் அதன் உறுதித் தன்மை மற்றும் நிலைப்புத் தன்மை (durability) தான். தங்கம் மென்மையான உலோகம் என்று தான் நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அதன் வேதித் தன்மைகளைப் பொறுத்து, அது அதிக உறுதியான உலோகம்.
தங்கத்தில் பாத்திரம் |
இரும்பு உபயோகம் |
தங்கத்தை விட இரும்பின் உபயோகம் அதிகம் தான். இன்றைய சிறு வீட்டு உபயோகப் பொருட்கள் முதல், மிகப்பெரும் இயந்திரங்கள் வரை இரும்பு தான் அதிகம். ஆனால், 'நிலைப்புத் தன்மை' என்ற விதத்தில் இரும்பு மிக உறுதியற்ற உலோகம். காற்றிலும் தண்ணீரிலும் துருப்பிடித்துக் கரைந்து போகும்; தொடர்ந்து மண்ணில் புதையுண்டால் மட்கி அழியும். அழியும் பொருளுக்கு விலையும் குறைவாகவே உள்ளது.
தன்னுடைய உறுதித் தன்மையாலும் (Strength) நிலைப்புத் தன்மையாலும் (Durability) தங்கம் உலகை ஆளும் பொருளாக இருக்கிறது. Gold rules the world Economy thanks to its Strength and
Durability.
தங்கம் போல் இருக்க வேண்டும் என்று விரும்பினால், 'தங்கமாகவே இருங்கள்'. - அதாவது, எப்போதும் உறுதியாகவும், அழியாத குணங்கள் கொண்டவர்களாகவும் இருங்கள்.
#தங்கம் #இரும்பு #பொருளாதாரநிலை
#Gold #Iron
# NationalEconomy
#தங்கம் #இரும்பு #பொருளாதாரநிலை
#Gold #Iron
# NationalEconomy