இன்று மக்கள் சேமிப்பை விட முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். Investment Solutions என்ற பெயரில் எந்த விதமான முதலீடுகளை ஒருவர் மேற்கொள்ளலாம் என்ற அறிவுரைகள் கூறப்படுகின்றன. அனால் நமது வாழ்வியலில் முதலீடு பற்றிய அறிவுரைகள் தினசரி உபயோகப்படுத்தும் பழமொழிகளில் கூறப்படுகின்றன. "உள்ளூர் பெண்ணும் வெளியூர் மண்ணும் ஆகாது" என்று என் தாத்தா அடிக்கடி கூறுவார். இதற்கு அர்த்தம் என்று அவர் கூறியது இது தான்: உள்ளூரில் பெண் எடுத்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு என்று வரும் பொழுது உடனேயே அருகில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று விடுவாளாம். மேலும் உள்ளூர் என்பதால் அவள் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீடு சென்றது அனைவருக்கும் தெரிந்து விடுமாம். அதுவே வெளியூரில் இருந்து எடுத்த பெண்ணாக இருந்தால் அவ்வளவு சுலபமாக தூரத்தில் இருக்கும் தாய் வீட்டிற்குச் செல்ல முடியாது; துணை யாரும் இன்றி பெண்கள் வெகு தூரம் பயணம் செய்ய பயப்படுவார்கள். அதனால் பிரச்சனைகளை அனுசரித்துக் கொண்டு கணவன் வீட்டிலேயே இருப்பார்கள். அதனால் உள்ளூரில் பெண் எடுப்பதை விட வெளியூரில் பெண் எடுப்பதே சரியானது.
மண்ணும் பெண்ணும் |
அடுத்து, வெளியூர் மண் (நிலம்) என் வேண்டாம்? வெளியூரில் நிலம் வாங்கினால் அது நம்முடைய பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாமல் இருக்க நேரிடும். வெளியூர் நிலத்தைப் பராமரிக்க நாம் வேறு யாருடைய உதவியையாவது கேட்க வேண்டி இருக்கும். அந்த நிலத்தினால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போவதற்கும், சில பிரச்சனைகளை சந்திப்பதற்கும் வேண்டி வரலாம். அதனால் தான் வெளியூரில் நிலம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
"உள்ளுரில் பெண்ணும் வெளியூரில் மண்ணும் ஆகாது" என்பது சரியான அறிவுரை தானே!
#அறிவுரை #பழமொழி
No comments:
Post a Comment