நாம் பள்ளிப் பாடமாகப் படித்தது தான் இந்த "முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள் பாரி!" என்கிற சொற்றொடர். அந்தக் கதையையும் நாம் படித்திருக்கிறோம். அதாவது - பாரி மன்னன் (கடையேழு வள்ளல்களில் ஒருவர்) ஒரு வள்ளல். துன்பம், கஷ்டம் என்று யார் வந்து உதவி கேட்டாலும் உடனே உதவி செய்து விடுவார்; ஒரு முறை அவர் தனது தேரில் சுற்றுப் பயணம் செய்த போது ஒரு முல்லைக் கொடி, பற்றிப் படர கொம்பு இல்லாமல் இருந்ததைப் பார்க்கிறார். அந்த முல்லைக் கொடிக்கு உதவி செய்யும் விதமாக, தான் ஏறி வந்த தேரையே நிறுத்தி, அது பற்றிப் படர வழி செய்தார். இது தான் வரலாற்றில் நாம் படித்த கதை.
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன் |
அதனாலேயே அவர் வள்ளலாகப் போற்றப் படுகிறார். எல்லாம் சரி. பாரி மன்னர் இதைக் கொஞ்சம் யோசித்துச் செய்திருக்கலாம். அருகில் இருக்கும் மரத்தின் மீது படர விட்டிருக்கலாம்; அல்லது தனது தேரோட்டியின் மூலம் ஒரு கொழு கொம்போ குச்சியோ நட்டிருக்கலாம். தன் தேரை ஏன் கொடுக்க வேண்டும்?
சிலை |
தேர் என்பது ஒரு செயலாற்றத்தக்க சாதனம் - operable machine. ஆனால் ஒரு முல்லைக் கொடி படருவதற்கு ஒரு passive structure (செயல் படாத அமைப்பு) போதும். மன்னர் ஒரு நல்ல பொருளை வீணடித்து விட்டார். பாரி மன்னர் Resource utilizationஐ இன்னும் நன்றாக யோசித்துச் செய்திருக்கலாம்.
#ResourceUtilization #பாரிமன்னர் #வேள்பாரி #பாரிவள்ளல்
#ResourceUtilization #பாரிமன்னர் #வேள்பாரி #பாரிவள்ளல்