காலண்டர் - தினமும் விழிக்கும் முகங்களில் ஒன்று. டெய்லி ஷீட், மன்த்த்லி ஷீட் காலண்டர்கள் என்று நாம் உபயோகிப்பது அனைத்தும் கிரிகோரியன் நாட்காட்டிகள். ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஒரு வருடத்தைக் காட்டும் கிரிகோரியன் நாட்காட்டிகள் பிரிட்டிஷ் காலத்திற்குப் பிறகு புழக்கத்திற்கு வந்தவை. அதற்கு முன்?..........
நிலாதான் நாட்காட்டி. தெய்வத்திருமகள் 'நிலா' இல்லை. :-) வானில் சுற்றும் 'சந்திரன்' எனப்படும் நிலா.... மாதத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயர் வைத்து, நினைவில் வைத்துக் கொண்டு, வானில் இருக்கும் நிலவின் அளவைப் பார்த்து, இது மாதத்தின் எத்தனையாவது நாள் என்று கணிக்கும் முறையே சந்திர நாட்காட்டி (The Lunar Calendar).
என்ன பெயர்கள்? எப்படிக் கணிக்க?
திதிகள் என்று சொல்லப்படுபவை எல்லாம் பொருளற்றவை அல்ல. ஒவ்வொரு திதியும் ஒரு தேதி. ஒரு அமாவாசையில் ஆரம்பித்து அடுத்த அமாவாசையில் முடிவது ஒரு மாதம். ( மாதத்திற்குத் 'திங்கள்' என்று பெயர். திங்கள் என்றால் நிலா.) பேராண்மை திரைப்படத்தில் ஜெயம் ரவி கணிப்பது போல... :-)
இதில் முதல் 15 நாட்கள் வளர்பிறை. அடுத்த 15 நாட்கள் தேய்பிறை. ஆக, முப்பது நாட்கள். நிலவு வளரும், தேயும் அளவுகளைப் பார்த்து நாள் கணித்துப் பழகியிருந்தனர்.
(எ.டு: தேய்பிறை துவிதியை என்பது மாதத்தின் 18-வது நாள்.)
நாட்காட்டி என்ற எதுவும் தனியாகத் தேவை இல்லை. 'சூரியனே கடிகாரம்' போல 'நிலவே நாட்காட்டி'.

- அமாவாசை
- பிரதமை
- துவிதியை
- திரிதியை
- சதுர்த்தி
- பஞ்சமி
- சஷ்டி
- சப்தமி
- அஷ்டமி
- நவமி
- தசமி
- ஏகாதசி
- துவிதியை
- திரிதியை
- சதுர்த்தசி
- பௌர்ணமி

Posted by: Kiruthika Vishnu.
No comments:
Post a Comment