Saturday, June 28, 2014
An interesting fact!
Look at the first picture...
He is a steward. A steward is a person who looks after the passengers on a ship, aircraft, or train.
He is a steward. A steward is a person who looks after the passengers on a ship, aircraft, or train.
Steward |
She is a stewardess. A female steward.
Stewardess |
The third picture...
Stewardesses. Crew of female stewards.
Stewardesses. Crew of female stewards.
Stewardesses |
What is so special with this?
Now look at the fourth picture.
Now look at the fourth picture.
'STEWARDESSES' is the longest meaningful word that can be typed in the QWERTY keyboard with only left hand.
Try checking this... Have a nice day!
#vocabulary games #வார்த்தை விளையாட்டு
Friday, June 27, 2014
சமாதானத்தை அறிவுறுத்தும் போர்க் கடவுள் முருகன்
இந்து சமய நம்பிக்கையில் முருகனே போர்க் கடவுளாகக் கருதப் படுகிறார். மன்னராட்சிக் காலங்களில் போருக்குப் போகும் வீரர்கள் "வெற்றிவேல்! வீரவேல்!" என்று கோஷமிட்டபடிப் போருக்குக் கிளம்புவார்கள். மனதில் வீரத்தையும் போரில் வெற்றியையும் தருபவர் வேலுடன் இருக்கும் முருகப் பெருமான் என்று நம்பினார்கள். முருகனின் கையில் வேல் இருப்பதே முருகன் போர்க் கடவுள் என்பதால் தான்.
வேல் பிடித்திருக்கும் போர்க் கடவுள் முருகன்
தமிழர் நாகரிகத்தில் போரின் முடிவு 'சமாதானம்' என்ற நிலையை எட்ட வேண்டும் என்று நினைத்தார்கள். அது போர்க் கடவுளான முருகப் பெருமானின் உருவ அமைப்பிலேயே காட்டப் பட்டிருக்கிறது. முருகனின் காலடியில் என்ன பார்க்கிறோம்? இந்தப் படத்தில் பாருங்கள்!
பாம்பும் மயிலும் அருகருகே |
பாம்பும் மயிலும் அருகருகே இருக்கின்றன இல்லையா? பாம்பும் மயிலும் பரம எதிரிகள். மயிலின் முட்டை பாம்புக்கு உணவு - பாம்பு மயிலுக்கு உணவு. எதிரிகள் இரண்டும் முருகனின் காலடியில் பகையை மறந்து ஒற்றுமையாய் நின்று கொண்டிருக்கும் காட்சியைத் தான் நாம் எல்லா முருகன் படங்களிலும் பார்க்கிறோம். அதாவது சண்டையின் முடிவு சமாதானமாக இருக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. வேறு எந்த மதத்தின் போர்க் கடவுளின் உருவத்திலும் இது போன்ற கோட்பாடு அமைக்கப் படவில்லை.
உதாரணத்திற்கு, கீழே இருப்பவை இரண்டும் ரோமானியப் போர்க் கடவுளான மார்ஸ்-இன் (Mars) உருவ அமைப்பு.
மார்ஸ் - ரோமானிய போர்க் கடவுள் |
சமாதானத்தை குறிக்கும் சின்னங்கள் ஏதுமில்லை. |
ரோமானிய மார்ஸ் உருவத்தில் சமாதானத்தைக் குறிக்கும் சின்னங்கள் ஏதும் அமைக்கப் பட வில்லை.
ஒரு போர்க் கடவுளே சமாதானத்தின் அடையாளமாகவும் இருப்பது தமிழ் இந்து மதத்தில் மட்டுமே. பெருமைக்குரிய விஷயம்தான். புரிஞ்சிக்கலாம்....
#முருகன் #போர்க்கடவுள் #சமாதானம் #mars
Monday, June 23, 2014
மிருகங்களின் பெண்பால் பெயர்கள்
மிருகங்களில் பெண்பால் மிருகங்களுக்குத் தனிப் பெயர்கள் இருக்கின்றன. அதையும் கவனிச்சு சரியாச் சொல்லிட்டோம்னா நாம நல்லாவே பேசுறோம்னு அர்த்தம். அதையும் பார்த்துடுவோமா...
மிருகம் ஆண்பால் பெயர் பெண்பால் பெயர்
- மாடு காளை, எருது பசு
- ஆடு கிடா மறி
- பூனை கடுவன் பெட்டை
- கோழி சேவல் பேடு/பெட்டை
- மயில் ஆண்மயில் பேடு/அளகு (Peahen)
- குரங்கு தாட்டான் மந்தி
- அன்னம் அகன்றில்/அன்றில் மகன்றில்/மன்றில்
- மான் கலை பிணை
- யானை களிறு பிளிறு
படங்கள் அனைத்தும் நெட் உபயம். சிரமப்பட்டு எடுத்தவர்களுக்கு, தொகுத்தவளின் நன்றிகள்.
#பெண்பால் #பெயர்கள்
மிருகங்களின் இளமைப் பெயர்கள்
எல்லா மிருகங்களுக்கும் அதன் பெயரின் இறுதியில் 'குட்டி' சேர்த்து விட்டால் போச்சா? ஒவ்வொரு மிருகம், பறவைக்கும் அதன் இளமைப் பெயர் இருக்கிறது. அதெல்லாம் என்னன்னு பாக்கலாமா?
சிங்கக் குருளை
புலிப் போத்து
சிங்கம் --- குருளை (Lion cub)
பசு --- கன்று
புலி --- பிறழ், போத்து (Tiger cub)
புலிப் போத்து
அணில் --- பிள்ளை
தவளை --- பிரட்டை (Tadpole)
தவளையும் பிரட்டைகளும்
கிளி --- பிள்ளை
மயில் --- குஞ்சு
ஆடு --- குட்டி
எருமை --- கன்று
கீரி --- பிள்ளை
தென்னை --- பிள்ளை
(தென்னைமரம் --- தென்னம்பிள்ளை)
கீரி --- பிள்ளை
தென்னை --- பிள்ளை
(தென்னைமரம் --- தென்னம்பிள்ளை)
இனிமேல் சரியாச் சொல்லுவோமா? ......... :-)!
Tuesday, June 10, 2014
புத்திக் காரகன் புதன் - கிரேக்க, இந்து மதங்களின் பார்வையில்...
உலகின் தொன்மையான நாகரிகங்களில் தமிழ் நாகரிகமும் கிரேக்க நாகரிகமும் முக்கிய இடத்தைப் பெறுபவை. இரண்டும் சமகால நாகரிகங்கள். மேலும் இந்த இரண்டு நாகரிகங்களிலும் பின் தொடரப்பட்ட வழிபாட்டு முறைகளும் ஒன்றுகொன்று தொடர்பு உடையவையாக இருக்கின்றன. மத நம்பிக்கைகளும் இந்த இரண்டு நாகரிகங்களிலும் ஒன்று போலவே இருந்திருக்கின்றன. இந்து மதத்தால் விஞ்ஞானப் பூர்வமாக அறியப் பட்ட உண்மைகளே கிரேக்க மதமான பாகனிசத்திலும் (Paganism) அறியப்பட்டுள்ளது.
தமிழ் ஜோதிட சாஸ்திரத்தில் புத்திக் காரகனான புதனுக்கு ஆங்கிலத்தில் 'மெர்குரி' (Mercury) என்று பெயர். 'பாதரசம்' என்று தமிழில் குறிக்கப்படும் திரவ உலோகம் தான் இந்த மெர்குரி. பாதரசம் ஒரு உலோகம். ஆனால் அது திரவ நிலையிலேயே இருக்கும். திரவப் பொருளில் திடப் பொருளின் குணங்கள் அடங்கியது தான் மெர்குரி. அது திடப் பொருளுடன் சேரும் போது திடப் பொருளின் தன்மைகளையும், திரவப் பொருளுடன் சேரும் போது திரவத்தின் தன்மையையும் பெறுகிறது.
புதன் கிரகம்
தமிழ் ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புதனை 'அலி கிரகம்' என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, ஆணின் குணங்களும் பெண்ணின் குணங்களும் இணைந்த ஒரு கிரகம். ஆண் கிரகங்களுடன் (உ-ம்: செவ்வாய்) சேரும் போது ஆண் கிரகமாகவும் பெண் கிரகங்களுடன் (உ-ம்: சுக்கிரன்) சேரும் போது பெண் கிரகமாகவும் தன்மைகளைப் பெறுகிறது. பாவக் கிரகங்களுடன் சேரும் போது பாபத் தன்மையையும் சுபக் கிரகங்களுடன் சேரும் போது சுபத் தன்மையையும் பெற்று விடுகிறது.
புதன் கிரகத்தின் இந்த குணாதிசயம் இரண்டு நாகரிகங்களிலும் வெவ்வேறு விதங்களில் உணர்த்தப் பட்டிருந்தாலும் பொதுவான தன்மைகள் ஒன்றாகவே இருக்கின்றன. (Though the interpretations are different, the properties are the same.) பார்வைகள் தான் வேறு; விஷயம் ஒன்று...
புதன் கிரகம்
பாதரசம் (Mercury)
புத பகவான்
கிரேக்கத்தில் புத பகவான் (Lord Mercury in Greek Mythology )
Subscribe to:
Posts (Atom)