இந்து சமய நம்பிக்கையில் முருகனே போர்க் கடவுளாகக் கருதப் படுகிறார். மன்னராட்சிக் காலங்களில் போருக்குப் போகும் வீரர்கள் "வெற்றிவேல்! வீரவேல்!" என்று கோஷமிட்டபடிப் போருக்குக் கிளம்புவார்கள். மனதில் வீரத்தையும் போரில் வெற்றியையும் தருபவர் வேலுடன் இருக்கும் முருகப் பெருமான் என்று நம்பினார்கள். முருகனின் கையில் வேல் இருப்பதே முருகன் போர்க் கடவுள் என்பதால் தான்.
வேல் பிடித்திருக்கும் போர்க் கடவுள் முருகன்
தமிழர் நாகரிகத்தில் போரின் முடிவு 'சமாதானம்' என்ற நிலையை எட்ட வேண்டும் என்று நினைத்தார்கள். அது போர்க் கடவுளான முருகப் பெருமானின் உருவ அமைப்பிலேயே காட்டப் பட்டிருக்கிறது. முருகனின் காலடியில் என்ன பார்க்கிறோம்? இந்தப் படத்தில் பாருங்கள்!
பாம்பும் மயிலும் அருகருகே |
பாம்பும் மயிலும் அருகருகே இருக்கின்றன இல்லையா? பாம்பும் மயிலும் பரம எதிரிகள். மயிலின் முட்டை பாம்புக்கு உணவு - பாம்பு மயிலுக்கு உணவு. எதிரிகள் இரண்டும் முருகனின் காலடியில் பகையை மறந்து ஒற்றுமையாய் நின்று கொண்டிருக்கும் காட்சியைத் தான் நாம் எல்லா முருகன் படங்களிலும் பார்க்கிறோம். அதாவது சண்டையின் முடிவு சமாதானமாக இருக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. வேறு எந்த மதத்தின் போர்க் கடவுளின் உருவத்திலும் இது போன்ற கோட்பாடு அமைக்கப் படவில்லை.
உதாரணத்திற்கு, கீழே இருப்பவை இரண்டும் ரோமானியப் போர்க் கடவுளான மார்ஸ்-இன் (Mars) உருவ அமைப்பு.
மார்ஸ் - ரோமானிய போர்க் கடவுள் |
சமாதானத்தை குறிக்கும் சின்னங்கள் ஏதுமில்லை. |
ரோமானிய மார்ஸ் உருவத்தில் சமாதானத்தைக் குறிக்கும் சின்னங்கள் ஏதும் அமைக்கப் பட வில்லை.
ஒரு போர்க் கடவுளே சமாதானத்தின் அடையாளமாகவும் இருப்பது தமிழ் இந்து மதத்தில் மட்டுமே. பெருமைக்குரிய விஷயம்தான். புரிஞ்சிக்கலாம்....
#முருகன் #போர்க்கடவுள் #சமாதானம் #mars
No comments:
Post a Comment