நிவாஸம் என்றால் நிரந்தரமான வாஸம்; அதாவது நிரந்தரமாக ஒரு இடத்தில் வசிப்பது. வீடுகளுக்குப் பெயர் வைக்கும் போது 'நிவாஸம்' என்று பெயர் வைப்பதைப் பார்த்திருக்கிறோம். (உ-ம்: 'ஆனந்த நிவாஸம்'). திருப்பதி ஏழுமலையானுக்கு 'ஸ்ரீநிவாசன்' என்று பெயர். 'ஸ்ரீ'யாகிய மகாலட்சுமி நிரந்தர வாசம் செய்யும் இடம் ஏழுமலையானிடம் தான். அதனால் தான் அந்தப் பெயர். 'நி' என்பது 'நிரந்தரம்' என்பதன் சுருக்கமே.
ஏழுமலையான் - ஸ்ரீநிவாசன் |
அப்படிஎன்றால் 'நிம்மதி' என்பதற்கு 'நிரந்தரமான மதி' என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாமா? மதியூகத்துடன் (அறிவுடன்) எப்போதும் இருந்து வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் நிம்மதியாக இருக்கலாம். இங்கே அறிவு என்பது வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் அறிவு; அந்த அறிவு நிரந்தரமாக இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்கும்.
#திருப்பதி #ஏழுமலையான் #நிம்மதி
#திருப்பதி #ஏழுமலையான் #நிம்மதி
No comments:
Post a Comment