தீபாவளி என்பது ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரனை வதைத்து, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டிய நாள் என்று புராணக் குறிப்புகள் கூறுகின்றன. ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் சதுர்த்தசி நாள் (அதாவது அமாவாசைக்கு முந்தைய நாள்) தீபாவளியாகவும், வட இந்திய மாநிலங்களில் அமாவாசை நாளே தீபாவளியாகவும் கொண்டாடப் படுகிறது. சில நேரங்களில் சதுர்த்தசி திதி அடுத்த நாளிலும் தொடர்ந்தால் வட இந்திய, தென்னிந்திய தீபாவளிகள் இரண்டும் ஒரே நாளில் கொண்டாடப் படுகின்றன.
அமாவாசை அன்று தீபாவளியைக் கொண்டாடுவதற்குக் காரணம் உண்டு. ராமாயணக் காவியத்தில் ஒரு ஐப்பசி மாத அமாவசை அன்று தான் ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் தமது பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை முடித்து அயோத்திக்குத் திரும்புகின்றனர். அயோத்தி மக்களும் அந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாகத் தங்கள் வீடுகளில் விளக்கேற்றித் தங்கள் மகிழ்ச்சியை ராமர், சீதை மற்றும் லட்சுமணருக்குத் தெரிவித்தனர்.
அப்போது முதல் ஐப்பசியில் தீபங்கள் ஏற்றி வைத்துக் கொண்டாடும் பழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. நாம் தமிழ்நாட்டில் கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபடுகிறோம். வட மாநிலங்களில் தீபாவளியன்றே தீபங்கள் ஏற்றிக் கொண்டாடி விடுகிறார்கள்; அதற்குக் காரணம் இது தான்.
தீபாவளி என்ற வார்த்தையின் விளக்கமும் இதையே கூறுகிறது. 'ஆவளி' என்றால் 'வரிசை' என்று அர்த்தம். (உதாரணத்திற்கு, '1008 நாமாவளி' என்பது 1008 நாமங்களின், அதாவது பெயர்களின் வரிசை) 'தீபாவளி' என்பது 'தீபங்களின் வரிசை' என்ற அர்த்தத்தில் கூறப்பட்டது தான்.
தீபாவளிக் கொண்டாட்டம் |
கிருஷ்ண அவதாரத்திற்கு முந்தின அவதாரம் ராம அவதாரம்; அதனால் ராமர் தீபாவளி கொண்டாடியிருக்க மாட்டார் என்று சிலர் சொல்வது உண்டு. ஆனால் ராமரால், ராமருக்காகத் தான் முதன் முதலில் தீபாவளி உருவானதும் கொண்டாடப் பட்டதும் என்பது தான் இதிகாச உண்மை.
#தீபாவளி #ராமர் #கிருஷ்ணர்
Well done Kirthi. Expecting more posts.
ReplyDeleteThanks Anusha.
Delete