பொதுவாகவே 13 என்ற எண் உலகின் பல்வேறு நாடுகளிலும் மர்ம எண்ணாகக் கருதப்படுகிறது. (இந்துக்களை, அதிலும் தமிழர்களைப் பொறுத்தவரை 8 என்ற எண் மீது தான் சற்று பயம். அது சனீஸ்வரனின் எண் என்பதால் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறோம்.) ஆனாலும் உலகமெங்குமே மர்மத்தையும் பயத்தையும் விளைவித்து, தவிர்க்கப் படும் எண்ணாகப் 13 ஆம் எண் விளங்குகிறது. அதற்குக் காரணம் ஒரு விஷயமாகத் தான் இருக்க முடியும். அது ஆதி மனிதர்களின் மன நிலை மட்டுமே.
பதிமூன்று |
நம் பயத்திற்கும் ஆதி மனிதன் பயத்திற்கும் என்ன தொடர்புன்னு கேட்கிறீங்களா? இருக்கு. மரபு வழி அறிவு (Gene Knowledge) என்பது நம் முன்னோர்களிடமிருந்து இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் அறிவு ஆகும். அது போலவே சிலரின் மீது கருணை, சில விஷயங்களின் மீது பயம்.... இவையெல்லாமும் நம் ஆழ்மனதில் இருக்கும் மரபு வழி அறிவு சார்ந்த விஷயங்களே! (Gene knowldegeன்னா..... ஸ்ருதிஹாசன் 'ஏழாம் அறிவு' படத்திலே ஆராய்ச்சி பண்ணுவாரே! அதே..... தான்.)
ஆதி மனிதன் |
மனித இனம் தோன்றிய காலத்தில் சில விஷயங்களைக் (சில மிருகங்கள், மரங்கள், தான் வளர்க்கும் கால்நடைகள் போன்றவற்றை....) கணக்கிட மனிதன் எண்களைப் புழக்கத்தில் கொண்டு வந்தான். அப்போது அவனுக்கு எண்ணிக்கைக்கு உதவியாக இருந்தவை கைகளும் கால்களும் தான். ஆதி மனிதர்கள் கை விரல்களில் பத்து எண்ணிக்கை வரை எண்ணக் கற்றுக் கொண்டார்கள். அதற்கு அடுத்த இரு எண்ணிக்கைகளுக்கு இரண்டு கால்களையும் பயன் படுத்திக் கொண்டார்கள். பன்னிரண்டு வரை ஆயிற்று. அடுத்த எண்ணாகிய பதிமூன்றை எண்ணுவதற்கு எதுவுமில்லை. அப்போது எப்படி எண்ணுவது என்பது தான் பதிமூன்றைப் பற்றிய முதல் மர்மமாக இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட பயம் மனிதனின் மூளையில் அப்படியே பதிந்து விட்டது.
அப்போதிருந்தே மனித இனம் பதிமூன்று என்ற எண்ணைக் கையாளுவதைப் பற்றிய பயத்தைக் கொண்டிருந்தது. ஆதி காலத்திலிருந்தே பதிமூன்றை முடித்த அளவு தவிர்த்திருக்கிறார்கள். பிறகு எண்ணிக்கைக்கென்று பல்வேறு கருவிகளை மனிதன் கண்டுபிடித்து விட்டான். கணிதம் என்பது இன்று எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும் இந்த பயம் மட்டும் இன்னும் மாறவில்லை.
இப்போது நமக்குத் தான் எண்ணத் தெரியமே. இனி (முடிந்தவரை) பயம் வேண்டாம். :-)
#13 #மர்மஎண்பதிமூன்று #பதிமூன்று #ஆதிமனிதன் #மர்மம் #திகில்
#13 #மர்மஎண்பதிமூன்று #பதிமூன்று #ஆதிமனிதன் #மர்மம் #திகில்
No comments:
Post a Comment